இலண்டன் தெருவில் கட்டாகாலியாக ஓடிய குரைகள்!!


மத்திய இலண்டன் வீதியில் ஓடிக்கொண்டிருந்த இரண்டு குதிரைகளை மீட்டதாக இலண்டன் நகரக் காவல்துறையினர் இன்று புதன்கிழமை தெரிவித்தனர்.

வெஸ்ட் எண்டிற்கும் இடையில் உள்ள ஆல்ட்விச் அருகே இன்று காலை சாலை ஒன்றில் வெள்ளை மற்றும் கறுப்பு நிறக் குதிரைகள் ஓடிக்கொண்டிருந்தன. 

இரண்டு குதிரைகளும் பிரிட்டிஷ் இராணுவத்தின் மிக மூத்த குதிரைப் படை ஒன்றிற்குச் சொந்தமானவை. இப்படைப்பிரிவு பெரும்பாலும் இலண்டனில் அரசு, பொதுப் பணிகள் மற்றும் மன்னரின் முடிசூட்டு விழா போன்ற நிகழ்வுகளில் காணப்படுகிறது.

குதிரைகள் இன்று காலை நொிசலான போக்குவரத்து நேரத்தில் வீதியில் ஓடியதால் போக்குவரத்து நொிசல் ஏற்பட்டது. டாக்ஸி, பேருந்து எனப் பல வாகனங்களைக் குரைகள் தாக்கியதால் சேதமடைடைந்தன.

இன்று காலை பயிற்சியின் போது குதிரைகள் தப்பிச் சென்றதாகவும் பின்னர் அந்தக் குதிரைகள் மீட்கப்பட்டு முகாமுக்குத் திரும்பியதாகவும் பிரித்தானிய இராணுவம் தெரிவித்தது.

No comments